குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...

திருவள்ளுவர்

தமிழின் தலையாய இலக்கியமான திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். கடைச்சங்ககாலப் புலவரான திருவள்ளுவர் கி.மு 400க்கும் கி.மு 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு இவர் பிறந்த ஆண்டாக கி.மு 31ஐ அறிவித்து அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது.

சங்ககாலப் புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

சங்ககாலப் புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது.

திருவள்ளுவரது இயற்பெயர் மற்றும் வாழ்ந்த இடம் பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும், அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும். காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.

சிறப்புப் பெயர்கள்

தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் ஆகியவை திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களாகும்.

புகழ் மாலைகள்

திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். பல புலவர்களின் பாடல்களால் தொகுக்கப்பட்ட, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக திருக்குறளின் சிறப்பினை அறியலாம்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என பாரதியார் பெருமை கொள்கிறார்.
"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"
என பாரதிதாசன் புகழ்ந்து பாடியுள்ளார்.

திருக்குறள் தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்கள், இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை, ஞான வெட்டியான்பஞ்ச ரத்னம் ஆகியவைகளாகும்.

இவை தவிர, இன்னமும் சில சிறப்புமிக்க நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் எனத் தெரிய வருகிறது. அந்த நூல்களில் முக்கியமானது, சுந்தர சேகரம் எனப்படுவதாகும். இஃது ஒரு சோதிட நூல் ஆகும். இதில், இந்தியாவின் பண்டைய சோதிட நூல்களிலும் இல்லாத பல அரிய சூத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவரும் சமயமும்

திருவள்ளுவர், திருக்குறளின் எந்த ஒரு செய்யுளிலும், தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியையும் தெரிவிக்காமல் தவிர்த்துவிடுகிறார். அவர் வாழ்ந்த காலத்தில், சமூகத்தில் வழக்கத்தில் இருந்த கடவுளர்களின் பெயர்கள் சில இடங்களில் வெளிப்படுகின்றன. கடவுள் வாழ்த்து எனப்படும் முதல் அதிகாரத்தில், தான் ஒரு கடவுள் நம்பிக்கையாளர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். ஆனால், தங்களுடைய மனதிலிருக்கும் அதே கடவுள்தான் அவர் மனதிலும் இருந்தார் என்று சிலர் ந(புல)ம்புகின்றனர். இன்னும் சிலர், இன்னும் சில படிகள் மேலே போய், திருவள்ளுவர் எங்கள் சாதிதான் என்று நிறுவ முயல்கின்றனர். இவர்களைப் போன்றோர் - -

"கற்றதனால் ஆய பயனென் கொல்"


மேலே

உங்கள் கருத்து


அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்