குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...

திருக்குறளில் இயல் பாகுபாடு

இந்தக் குறள் மணிமாலை தளத்தில், அதிகாரங்கள் மற்றும் குறள்களை எளிதில் அணுகும் வண்ணம், அறம், பொருள் மற்றும் இன்பம் எனும் மூன்று பால்களுக்கென்று தனித்தனியே பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிகாரங்களின் தலைப்புகள், அணுகுக்குறிகளாகவும் ( Links ) அவை, மேலும் எளிய முறையில் இயல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இயல்களைப்பற்றி நாம் சில செய்திகளை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

திருக்குறள், முதலில் முப்பால் என்று அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. திருக்குறளின் மூன்று பால்களுக்கும் அறம், பொருள் மற்றும் இன்பம் (அல்லது காமம்) என்ற தலைப்புகளையும், 133 அதிகாரங்களின் தலைப்புகளையும் திருவள்ளுவரே அளித்தார் என்ற கருத்தை எல்லா அறிஞர்களும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், இடை நிலைப்பிரிவுகளான " இயல்கள் " உரையாசிரியர்களால், அவர்களுடைய விருப்பப்படி வெவ்வேறு எண்ணிக்கைகளில் உருவாக்கப்பட்டவை. கீழ்க்காணும் அட்டவணையைக் காணும்போது, எண்ணிக்கை வேறுபாடுகள், பெரும்பாலும் பொருட்பாலிலேயே காணப்படுவதை அறியலாம்.

மணக்குடவர்
அறம்
அதிகாரங்கள் 38
இயல்கள் 4
  1. பாயிரம் 4
  2. இல்லறம் 20
  3. துறவறம் 13
  4. ஊழ் 1
பொருள்
அதிகாரங்கள் 70
இயல்கள் 6
  1. அரசியல் 25
  2. அமைச்சியல் 10
  3. பொருளியல் 5
  4. நட்பியல் 5
  5. துன்பவியல் 12
  6. குடியியல்13
இன்பம்
அதிகாரங்கள் 25
இயல்கள் 2
  1. களவியல் 7
  2. கற்பியல் 18
காலிங்கர்
அறம்
அதிகாரங்கள் 38
இயல்கள் 4
  1. பாயிரம் 4
  2. இல்லறம் 20
  3. துறவறம் 13
  4. ஊழ் 1
பொருள்
அதிகாரங்கள் 70
இயல்கள் 7
  1. அரசியல் 25
  2. அமைச்சியல் 10
  3. அரணியல் 2
  4. கூழ் (பொருள்) இயல் 1
  5. படையியல் 2
  6. நட்பியல் 17
  7. குடியியல் 13
இன்பம்
அதிகாரங்கள் 25
இயல்கள் 3
  1. ஆண்பால் கூற்று 7
  2. பெண்பால் கூற்று 12
  3. இருபால் கூற்று 6
பரிமேலழகர்
அறம்
அதிகாரங்கள் 38
இயல்கள் 4
  1. பாயிரம் 4
  2. இல்லறம் 20
  3. துறவறம் 13
  4. ஊழ் 1
பொருள்
அதிகாரங்கள் 70
இயல்கள் 3
  1. அரசியல் 25
  2. அங்கவியல் 32
  3. ஒழிபியல் 13
இன்பம்
அதிகாரங்கள் 25
இயல்கள் 2
  1. களவியல் 7
  2. கற்பியல் 18

குறள்மணிமாலை தளம் வடிவமைக்கப்படும்போது, பரிமேலழகரின் உரைகளை, புறக்கணிப்பதென்று முடிவு செய்யப்பட்டது. எனினும், பரிமேலழகரின் "இயல் பகுப்புகள்" சரியானவையாக இருக்குமென்றே தோன்றுகிறது. திருக்குறளின் இயல்கள் தொடர்பாக, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் ( TNPSC ) தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள், பரிமேலழகரைப் பின்பற்றியே அமைகின்றன.


மேலே

உங்கள் கருத்து


அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்